Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சம்பளம் 1281 ரூபாவாக உயர்த்துக

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1281 ரூபாவால் உயர்த்துமாறு கோரி அட்டனில் இன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

சம்பள உயர்வு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்ததில் கைச்சாத்திடும் தொழிற்சங்களுக்கும் இடையில் பலகட்ட பேச்சுகள் நடைபெற்றுள்ள நிலையில் இதுவரை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் எவ்வளவு என உறுதியாக தீர்மானிக்கப்படவில்லை. பல்வேறு தரப்பினர் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துமாறு கோரி அலுத்தம் கொடுத்து வருகின்றனர்.

கம்பனிக்ளுக்கு எதிராக அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் எதிர்வரும் 23 மூன்றாம் திகதி தலவாக்கலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளன.

இந்நிலையில், இன்று அகில இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தினை 1281 ரூபாவால் உயர்த்துமாறு கோரி அட்டன் நகரில் இரு மொழிகளில் அச்சங்கத்தின் தலைவர்’ கிட்ணன் செல்வராஜா தலைமையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

இது குறித்து அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கைளில்,

அரசாங்கத்தில் வேலை செய்கின்ற மற்றும் தனியார் துறையினருக்கும் அரசு தலையிட்டு சம்பளத்தினை அதிகரித்துள்ளன. தோட்டத்தொழிலாளர்களுக்கு போதியளவு சம்பளம் வழங்கப்படாமையினால் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இன்றுள்ள பொருளாதார நிலைக்கு ஏற்ப குறைந்தது 1281 ரூபா சம்பளமாவது வழங்குவதற்கு பொறுப்பு வாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

(பத்தனை க.கிஷாந்தன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *