Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உடமையாளராக்குவதே ஒரே தீர்வு

– சபையில்  திலகர் எம்.பி

இலங்கையின் தேயிலைத் தொழிற்றுரையை முன்வைத்து எழுந்திருக்கும் பிரச்சினை இன்று , நேற்று உருவானதல்ல. இதற்கு பின்னால் நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. அவர்கள் பொருளாதார ரீதியாக மட்டுமல்ல சமூக ரீதியாகவும் அடக்கி ஒடுக்கிவைக்கும் கைங்கரியம் இதற்கு பின்னால் இருந்து வந்துள்ளது. 

1972 வரை பிரித்தானிய கம்பனிகளின் கீழ் இருந்த தோட்டங்கள் 1972 க்கும் 1992 க்கும் இடையே அடிப்படை மாற்றங்க ளுக்கு உள்ளாகின. தெற்கிலே உள்ள சிங்கள மக்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். ஆனால், மத்தியிலே தமிழர்கள் தோட்டத் தொழிலாளிகளாகவே வைக்கப்பட்டுள்ளார்கள். அதனால் தான் சம்பள உயர்வு கோரிக்கை க்கான குரல் தமிழில் மட்டுமே எழுந்து கொண்டிருக்கிறது.
அது யாருக்கும் கேட்பதுமில்லை. தெற்கில் வாழும் மக்கள் சிறு தோட்ட உடமையாளராக செயற்பட முடியுமெனில் தமிழ் தொழிலாளர் களுக்கு ஏன் முடியாது. 


நூற்றாண்டு காலமாக அவர்கள் செய்த தொழிலை அவர்களால் நிர்வகிக்க முடியும். எனவே இந்த பிரச்சினையை சம்பளத் தொகைக்குள் மட்டுப்படுத்தாது உயர்நிலத் தேயிலையில் தொழிலாளர்களாக அல்லாது சிறு தோட்ட உடமையாளராக்குவதே ஒரே தீர்வு என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாள ர்களின் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையினை வழிமொழிந்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 


அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரேரணையை முன்வைத்து இருக்கும் அனுரகுமார திஸாநாயக்க பல்வேறு வரலாற்று காரணங்களை முன்வைத்தார். 
அவற்றில் பல பொருளாதாரம் சார்ந்தவை, அதே போல சமூகம் சார்ந்தவை. இந்த மக்களின் தொழில் நிர்வாகம் மாத்திரமல்ல சமூக நிர்வாகமும் அரசாங்கத்தினால் அன்றி கம்பனிகளினாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. 
இன்று ஓரளவு அதில் தளர்வு ஏற்பட்டு அரசாங்கம் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டாலும் சுகாதாரம் உள்ளிட்ட பல விடய ங்கள் இன்னும் அரசாங்க பொது சேவையாக வரவில்லை. இன்றுவரை தோட்டப்பகுதி சுகாதார சேவை அரசாங்கத்தின் பொறுப்புக்கு எடுக்கவில்லை. அமைச்சரவை பத்திரம் அனுமதித்த நிலையிலேயே உள்ளது. 


மலையகப் பெருந்தோட்டத்துறை மக்களின் கல்வி நிலை பின்தங்கிய நிலைமை பற்றி அனுரகுமார எம்.பி தெரிவித்தார். அது அந்த சமூகத்தின் இயலாமை அல்ல. இந்த நாட்டின் ஏனைய இனத்தவருக்கு கிடைக்கப்பெற்ற இலவச கல்வி தோட்டப்பகுதி மக்களுக்கு கிடைக்கவில்லை. 
நாங்கள் இன்று பட்டதாரியாக இந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறோம். ஆனால், அரசாங்க பாடசாலையில் இலவச கல்வி வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் நாங்கள் தோட்டப் பாடசாலை யிலேயே ஆரம்ப கல்விக்காக சேர்க்கப்பட்டோம். அங்கு எங்களுக்கு பாடம் அல்ல படம் தான் கற்பிக்கப்பட்டது. பின்னர் அரசாங்க பாடசாலையில் கற்க வேண்டும் என்ற காரணத்தினால் நான் சிங்கள மொழிமூலம் படிக்க சிங்கள பாடசாலையில் சேர்க்கப்பட்டேன்.

இந்த வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தால், 1817 முதல் 1917 வரையான நூறாண்டு காலமாக இந்த நாட்டில் பிரித்தானியர்களால் அடிமைகளாக வைக்கப்பட்ட மக்கள் அக்காலத்தில் இடம்பெற்ற ரஷ்ய புரட்சியோடு எழுந்த தொழிற்சங்க எழுச்சியின் பயனாக தொழிற்சங்க கட்டமைப்பை பெற்றது. இந்தியாவில் இருந்து ஊடகவியலாளராக வருகைதந்த கோ.நடேசய்யர் ஊடாக 1920 ஆம் ஆண்டே வெளிச்சத்துக்கு வந்தது. 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த போதும் மலையக மக்கள் அன்றே சுதந்திரத்தை இழந்தனர். இலங்கை குடியுரிமையை இழந்த நிலையில் 1972ஆம் ஆண்டு வரையும் கூட பிரித்தானிய கம்பனிகளின் கீழாகவே நிர்வகிக்கப்பட்டன. 1972 ஆம் ஆண்டுக்கும் 1992 ஆம் ஆண்டுக்கும் இடையில் அரச கூட்டுத்தாபனங்களுக்கு கீழ் கொண்டுவரப்பட்ட பெருந்தோட்டங்கள் உயர்நிலைத் தேயிலையாக தாழ் நிலத்தேயிலை கொண்ட பிரதேசங்கள் சிறு தோட்ட உடமைகளாயின. 


இன்றைய இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் 70 சதவீதமான ஏற்றுமதி 30 சதவீதமான தேயிலை நிலப்பரப்பை கொண்ட சிறு தேயிலை தோட்ட உடமையாளர்க ளிடத்தில் இருந்தே ஏற்றுமதி ஆகிறது. 70 சதவீதமான தேயிலை நிலப்பரப்பைக் கொண்ட உயர் நிலத் தேயிலையில் இருந்து 30 சதவீதமான ஏற்றுமதியே இடம் பெறுகிறது. அதேநேரம் 70 சதவீத தேயிலை ஏற்றுமதிக்குரியவர்கள் சிறுதோட்ட உடமையாளர்க ளாகவும் சிங்கள மக்களாகவும் உள்ளனர். 30 சதவீத தேயிலை ஏற்றுமதிக்குரியவர்கள் பெருந்தோட்டத்தின் கீழ் தொழிலாளர்களாகவும் தமிழர்களாகவும் உள்ளனர். அதனால்தான் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி தமிழில் சத்தம் போட்டுக்கொண் டிருக்கிறோம். அந்த சத்தம் பலருக்கு கேட்பதில்லை. இதனை நான் இனவாத அடிப்படையில் கூறவில்லை. எனினும்1972 – முதல் 1992 வரையான அரசாங்கங்கள் இதனை இவ்வாறே கையாண் டுள்ளன.


1992 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன. அதன்போது பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் இரண்டு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. ஒன்று PMMD எனும் கண்காணிப்பு நிறுவனம். மற்றையது PHDT எனப்படும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனம். இந்தPMMD நிறுவனத்தின் வேலை பெருந்தோட்ட கம்பனிகள் முறையாக நிர்வகிக்கப்ப டுகின்றனவா என்பதை கண்காணிப்பு செய்வதாகும். 
அவர்கள் அதனை முறையாக செய்திருந்தால் இன்று ஏன் தோட்டங்களின் விளைநிலப் பகுதி குறைவடைந்து. தோட்டங்கள் எப்படி காடாகின. தொழிலாளர்கள் எண்ணிக்கை எப்படி ஐந்து லட்சத்தில் இருந்து ஒரு லட்சமாக குறைந்தது. இந்த நிலையில் பெருந்தோட்டத்துறை கைத்தொழில் அமைச்சர் கம்பனிகளை பாதுகாக்க வேண்டும் என கருத்து பகிர்கின்றார். 


மறுபுறத்தில் தொழிலாளர்களின் சேமநல விடயங்களுக்காக தாபிக்கப்பட்ட PHDT எனப்படும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனம் தொழிலாளர்களுக்காக ஒரு பகுதி நிதியை மாதாந்தம் இந்த நிதியத்துக்கு செலுத்த வேண்டும். அதனூடாக அவர்கள் உட்கட்டமைப்பு சுகாதார வசதிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. அதனை செலுத்தினாலே ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க முடியும். அரசாங்கம் இன்று வீடமைப்பு, உட்கட்டுமான பணிகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் தோட்ட கம்பனிகள் தாம் செய்யாது விடுகின்றன அந்த பணிக்குரிய பணத்தை சம்பளத் தொகையுடன் சேர்த்து வழங்குவதன் மூலம் ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுக்கலாம். இன்றைய திகதியில் சுமார் 400 மில்லியன் ரூபா அவர்கள் நிதியத்துக்கு செலுத்த வேண்டியுள்ளது. இவை எல்லாம் கூட்டு ஒப்பந்த பேச்சு வார்த்தையில் பேசப்படுவதில்லை. இன்று. தேயிலையை ஏற்றுமதி செய்து வருமானம் ஈட்டவற்கு பதிலாக அந்த தொழிலில் ஈடுபட்ட தாய்மாரையும் சகோதரிகளையும் வீட்டு வேலையாட்களாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் வருமானத்தை அந்நிய செலாவணி வருமானமாக பெறும் நிலை இந்த கூட்டு ஒப்பந்தத் தினால் ஏற்பட்டுள்ளது. 


2016 ஆம் ஆண்டு செய்துகொள்ள ப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் அவுட்குரோவர் முறைக்கு தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. அதனால், இங்கே சம்பளத் தொகை எவ்வளவு என ஒப்பந்தம் போட்டாலும் அதற்கு மாறான இன்னுமொரு உடன்படிக்கையை தொழிலாளர்களுடன் மேற்கொள்ளும் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுடன் தனிப்பட்ட முறையில் ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. அங்கு அவர்களுக்கு தேயிலை மரங்களே பகிரந்தளிக்கப்படுகின்றன. எனவே 12 நாட்களுக்கு வேலை வழங்கிவிட்டு எஞ்சிய நாட்களில் அவுட்குரோவர் முறையில் வேலை செய்ய பணிக்கப்படுகின்றனர். இதனால் ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட பல தொழில் உரிமைகள் மீறப்படுகின்றன. எனவே தெற்கில் சிங்கள மக்களுக்கு எவ்வாறு பெருந்தோட்டங்கள் பகிரப்பட்டு சிறு தோட்ட உடமையாளர்களா க்கப்பட்டுள்ளார்களோ அதேபோல மத்திய மலைநாட்டில் வசிக்கும் தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கும் தோட்டங்கள். பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும். நூற்றாண்டு காலமாக தோட்டங்களில் வேலை செய்தவர்களால் அதனை நிச்சயமாக சிறு தோட்ட உடமையாளர்களாக முடியும். 


தற்போது நடைமுறையில் உள்ள சிக்கல்கள் பல நிறைந்த இந்த கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தொழிற்சங்கவாதியான தம்பையா எனும் சட்டத்தரணி உயர்நீதிமன்றில் தொடுத்த வழக்கில் இந்த கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து முதலாளிமார் சம்மேளனமோ அல்லது தொழிற்சங்கங்களோ விலகினாலே அன்றி வேறு வழியில்லை என தீர்ப்பளித் துள்ளது. கடந்த ஒக்டோபர் 26 இல் இந்த நாட்டின் அரசியலமைப்பை மீறிய சம்பவம் இடம்பெற்ற போது நாம் நீதிமன்றத்தை நாடினோம். அதற்கு நீதிமன்றம் அரசியலை மைப்பு மீறப்பட்டதாக தீர்ப்பளித்தது. ஆனால், இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் நீதிமன்றம் கூட தலையிட முடியாத நிலைமையே உள்ளது. 


இன்று இந்த நாட்டில் தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக்குவது தொடர்பில் அனைவரும் இணக்கப்பாடு தெரிவிக்கின்றபோதும் அதற்காக உள்ள ஏற்பாடுகள் குழப்பகரமா னவை. ஆனாலும், ஆயிரம் ரூபா சம்பளத் தொகை நியாயமான கோரிக்கை என இந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆளும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றனர். 


தற்போது தேசிய ரீதியாக குறைந்த பட்ச சம்பளம் 400/- ஆகும். எனவே 500/- அடிப்படை சம்பளம் வழங்கும் தோட்டக் கம்பனிகள் தாம் நூறு ரூபா மேலதிகமாக வழங்குவதாக தர்க்கம் புரிகின்றன. எனவே ஆயிரம் ரூபாவை அடிப்படைச் சம்பளமாக அறிவிக்க வேண்டும். அப்போது கம்பனிகளால் அதனைத் தட்டிக் கழிக்க முடியாது. இதய சுத்தியோடு அணுகுபவ ர்களாக இருந்தால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோருமாக ஒன்று சேர்ந்து குறைந்தபட்ச வேதன சட்டத்தை திருத்தி அதனை ஆயிரம் ரூபாவாக மாற்றி அமைக்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *