Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நேருவின் மரணத்தினால் திசைமாறிய இந்திய வம்சாவளியினர் நிலை

சிறிமா பண்டாரநாயக்காவின் மேலவைக்கான அறிக்கையின் நான்காம்பாகமாக அமைந்த கடந்த வாரப் பகுதி “யாருக்கும் புரியாத கணக்கு”என்றே தலைப்பிடப்பட்டு இருந்தது. காரணம், பெரும்பாலானவர்க்கு அது புரியாத ஒன்றாகவே இருக்கும்.

ஆனாலும், புரியாவிட்டாலும் கூட இதுதான் மனிதப்பண்டங்களாகமலையகத் தமிழர்களைப் பங்கிட்டுக் கொண்ட “யாருக்கும் புரியாதகணக்கு” என்பதை புரிந்து கொள்ளவே இந்த அறிக்கை இங்கே பதிவுசெய்யப்படுகின்றது. எனினும், இந்த பாகத்தில் பின்வரும் விடயங்கள்அவதானிக்கத்தக்கது.

இந்தியாவுக்கு மீண்டும் சென்று அந்நாட்டின் பிரஜாவுரிமையைப்பெறுவதற்கு விரும்பினால், அவர்களின் பிரேரணைக்கு இந்தியஅரசாங்கம் மறுப்பு தெரிவிக்கலாகாது என்ற வரிகள்

மூலம் இலங்கை எப்போதும் இவர்களை அனுப்பும் எண்ணத்தேயே கொண்டிருந்தது என்பது தெளிவு.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியர்களை இந்தியாவுக்குகட்டாயமாக திருப்பி அனுப்புதலாகாது எனவும் இந்தியப் பிரதமர்விரும்பினார்.// என்ற வரிகள் மூலம் இந்தியா இவர்களை ஏற்றத் தயாராகஇருக்கவில்லை என்பதும் தெளிவு.

இந்த ஆட்களில் எவருமே நாடற்றவர்கள் எனும் நிலைப்பாட்டினைஇலங்கைகைத் தூதுக்குழு ஏற்றுக்கொள் ளவில்லை//

இந்த நாடற்றவர் என்ற சொல்லை இந்தியா விரும்பியதும், இலங்கைவிரும்பாததும் ஒரே காரணத்துக்காக என்பதுவும் தெளிவு. இருவருமேஎங்காவது ஒரு பக்கத்தில் இந்த மனிதப்பண்டங்களை சுமத்திவிடுவதிலேயே குறியாக இருந்துள்ளனர் என்பதுவே அது.

இருந்தபோதிலும், சிறிமாவின்  அறிக்கையின் தொடர்ச்சியை வாசித்துஅறிவதன் மூலம் இரண்டு அரசுகள் எவ்வாறு “ குத்துமதிப்பாக”மக்களைப் பண்டங்கள் போன்று பரிமாற்றம் செய்ய ஒப்பந்தங்களைசெய்து கொண்டுள்ளார்கள் என்பது புலப்படும்.

( அறிக்கை தொடர்கிறது)

பிரஜாவுரிமைக்காக 775000 ஆட்களை உள்ளடக்கிய கிட்டத்தட்ட 237034விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. இவற்றில் 134188 ஆட்களைஉள்ளடக்கிய 31409 விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டதுடன், இந்தநபர்கள் இலங்கைப் பிரசைகளாகவும் பதிவு செய்யப்பட்டனர். 675000ஆட்களை உள்ளடக்கிய 205625 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 1954ஆம் ஆண்டு உடன்படிக்கையில் இருந்து இந்திய உயர்ஸ்தாணிகராலயம்53085 நபர்களை இந்திய பிரஜைகளாக பதிவு செய்துள்ளது.

1954 ஆம் ஆண்டு. உடன்படிக்கை தோல்வி அடைந்ததன் காரணம், அதுதனி நபர்களின் தற்றுணிபிற்கு அதிகமான விடயங்களைவிட்டுவிட்டதேயாகும். இலங்கைப் பிரசாவுரிமையை பெற்றுக் கொள்ளத்தவறிய இந்திய வம்சாவளி நபர் ஒருவர், இந்திய பிரசாவுரிமைக்குவிண்ணப்பிப்பதா இல்லையா என்பதைத் தெரிவு செய்யும் பொறுப்பைஅவருக்கே விட்டுவிட்டதும் இந்திய பிரசாவுரிமை வழங்கல் தொடர்பாகஅதிகாரிகளின் தற்றுணிபிற்கு அனுமதியளித்ததுமானதோர் ஒப்பந்தம்வெற்றியடைய வெகு சிறிய வாய்ப்பே இருந்தது.

இந்திய பாகிஸ்தான் வதிவாளர்கள் ( பிரசாவுரிமை ) சட்டத்தின் கீழ் பதிவுசெய்யும் நடைமுறை பூர்த்தியானதும்  நான் பண்டித் நேருவுடன்பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்தேன். இலங்கைப்பிரசாவுரிமையினைப் பெற்றுக் கொள்ளாத இலங்கையிலுள்ள இந்தியவம்சாவளியினர் இந்திய பிரசைகளாவர் என்பதே இலங்கையின்நிலைப்பாடு என்பதை தெளிவாக எடுத்துக் கூறினேன்.இந்தியஅரசாங்கம் இந்த நிலைப்பாட்டினை ஏற்றுக்கொள்ள கொள்ளவில்லை.இதனால் பேச்சுவார்த்தைகள் முடங்கின. இக்கட்டத்திலே , இந்தியபிரதமருடன் நேரடி பேச்சுவார்த்தையினை நடத்துவது உசிதமானது எனநான் நினைத்தேன். அவர் அதனை ஏற்றுக்கொண்டார். பிரதமர் நேருஇந்த வருடம் மே மாதம் காலமானதை நீங்கள் அறிவீர்கள். அதனால், இந்தவிடயத்தை நான் அவரை தொடர்ந்து பிரதமராகிய லால் பகதூர்சாஸ்திரியுடன் மீண்டும் பேசவேண்டி ஏற்பட்டது.

இந்திய பிரதமரின் முன்னெடுப்பின் பேரில் இப்பிரச்சினை பற்றிஉத்தியோகபூர்வ மட்டத்தில் கலந்துரையாடல் நடத்துவதற்காகசெப்டெம்பரில் உத்தியோகபூர்வ தூதுக்குழு ஒன்று கொழும்புக்குஅனுப்பிவைக்கப்பட்டது. இந்த நபர்களின் பிரசாவுரிமை அந்தஸ்துதொடர்பாக இலங்கை வெளிப்படுத்திய கருத்துக்களை இந்தியதூதுக்குழு ஏற்றுக்கொள்ளாதபோதிலும் ஒரு விட்டுக்கொடுப்புமிகுதீர்வினை இந்தியா முன்வைத்தது. அதாவது, இந்திய வம்சாவளியினரில்குறிப்பிட்ட எண்ணிக்கையினர், இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படல்வேண்டும். ஏனையோருக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்படல்வேண்டும் என்பதே அதுவாகும்.

(அறிக்கை தொடரும் )

பின்குறிப்பு : சிறிமாவின் அறிக்கையின் ஐந்தாம் பாகத்தில் மிகமுக்கியவிடயம் ஒன்று வெளிப்படுவது அவதானிக்கத்தக்கது. 1949  இந்தியபாகிஸ்தான் வதிவாளர் ( பிரஜாவரிமை ) சட்டம் நிறைவேற்றப்பட்டதில்இருந்து இலங்கையின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட பண்டிற்ஜவகர்லால் நேரு, இந்திய வம்சாவளியினரை இலங்கையில் இருந்துமீளப் பெறாமல் இருப்பதற்கான எல்லா சாத்தியமான அரசியல்நகர்வுகளையும் செய்துள்ளார். அவரது இறப்புவரை அந்த நகர்வுசாத்தியமாகியுள்ளது. அவரது இறப்பு நிகழ்ந்து ( 1964 -05-24) குறுகியகாலத்தில் இடைக்கால பிரமராகவிருந்த லால் பகதூர் சாஸ்திரியுடன்ஒப்பந்தத்தை செய்து பல லட்சம் பேரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியசாதுரியம் சிறிமா பண்டரநாயக்கவுடையது.

இலங்கைப் பிரசாவுரிமையை பெற்றுக் கொள்ளத் தவறிய இந்தியவம்சாவளி நபர் ஒருவர், இந்திய பிரசாவுரிமைக்கு விண்ணப்பிப்பதாஇல்லையா என்பதைத் தெரிவு செய்யும் பொறுப்பை அவருக்கேவிட்டுவிட்டது. இப்படி 1954 ஒப்பந்த தோல்விக்கு காரணம் என சிறிமாஎண்ணியதன் காரணமாகவே 1964 ஒப்பந்தம் இன்னும் கடுமையானதாக,கட்டாயமாக நாடு கடத்துவதாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *