Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பெருந்தோட்டத்துறை மக்களின் அபிவிருத்தியில் அரசாங்கத்தின் வகிபாகம்

– பிலிப்பைன்ஸிலிருந்து மல்லியப்புசந்தி திலகர்

பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்களின் பொருளாதார பிரச்சினையாக சம்பளம் தொடர பாக தொடர் போராட்டங்களும் , வாதப்பிரதிவாதங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், அந்த மக்களின் சமூக, சேமநல உட்கட்டுமான விடயங்களை கையாள்வதற்காக அமைக்கப்பட்ட “பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம்” எனப்படும் ட்ரஸ்ட் நிறுவனத்திற்கான “எண்ணக்கரு பத்திரத்தைத்” தயாரித்த கலாநிதி டேவிட் எம். டொட் உடன் இடம்பெற்ற உரையாடலின் பின்னணியில் அமைந்த ஒரு மீளாய்வு.

ஆசிய – பசுபிக் நாடுகளின் மதிப்பாய்வு ஒன்றியத்தின் இரண்டாவது சர்வதேச மாநாடு பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் பெப்ரவரி 25 முதல் மார்ச் 1 வரை நடைபெற்றது. மாநாட்டின் தொடக்க நிகழ்வு பிலிப்பைன்ஸ் நாட்டின் செனட் சபை கட்டடத்தொகுதியிலும், இரண்டாம் நாள் அமர்வுகள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையக மாநாட்டு மண்பத்திலும் நடைபெற்றன. 
தொடர்ந்து விருந்தகம் ஒன்றில் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில், மதிப்பாய்வுக்கான இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் அமையத்தின் சார்பில், மதிப்பாய்வுக்கான சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்களின் அமையத்தின் தலைவரும் பெருந்தெருக்கள் கனியவள அபிவிருத்தி அமைச்சருமான கபிர் ஹசீம் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜ் ( கட்டுரையாளர்), கயந்த திசாநாயக்க, சந்தித் சமரசிங்க, லக்‌ஷ்மன் விஜேமான ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 


உலகளாவிய ரீதியில் மதிப்பாய்வு, அபிவிருத்தித் திட்டமிடல் குறித்த ஆய்வாளர்கள், உசாத்து ணைவர்கள், சர்வதேச முகவர் நிறுவனங்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலதரப்பட்ட வர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் எதிர்பாராத விதமாக இடம்பெற்ற ஒரு சந்திப்பினதும் உரையாடலினதும் பின்னணியில் இந்த கட்டுரை அமைகின்றது. 


1817 இல் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் பெருந்தோட்ட த்துறை கட்டமைப்பு அதுவரைக் குமான இலங்கையின் கிராமிய பொருளாதார முறைமைக்கு ஒரு சவாலாக அமைந்தது. எனவே உள்நாட்டு மக்கள் அந்த பெருந்தோட்டத்துறை வருகையை விரும்பி ஏற்காத நிலையில் வெளிநாட்டில் இருந்து தொழிலாளர்களை அழைத்துவர பிரித்தானியர்கள் தீர்மானித்திருக் கிறார்கள். 
ஆரம்பத்தில் பெருந்தோட்டத்துறை அனுபவம் மிக்க சீனர்களையே அழைத்துவர எண்ணினாலும் செலவும், தூரமும் கருதி அண்மித்த நாடான தமது கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவின் தமிழகத்தில் இருந்து அழைத்துவர தீர்மானித்து ள்ளனர். அப்போது தமிழ்நாட்டில் நிலவிய சமூக சூழல் காரணிகளும் அதனை ஊக்கப்படுத்தியுள்ளன. இவ்வாறு வந்தவர்களே இன்று மலையகத் தமிழ் மக்களாக இலங்கையில் பரிணமித்துள்ளனர்.

அந்நிய முதலீட்டினாலான ஏற்றுமதி நோக்கிய பெருந்தோட்டப் பொருளாதார முறைமையை விரும்பாத உள்நாட்டவர்கள் ( சிங்கள மக்கள்) அந்நிய முதலீட்டை போலவே அந்நிய உழைப்பாள ர்களையும் விரும்பவில்லை. 
ஆண்டுகள் பல கடந்து சென்றபின்னர் 1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு பிரித்தானியர் சுதந்திரம் வழங்கியதோடு இந்த மலையகத் தமிழர்களை அந்நியர்களாக கருதிய உள்நாட்டு அரசு உடனடியாகவே பிரித்தானியர் வழங்கிய குடியுரிமையைப் பறித்ததுடன் 1964 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு நாடு கடத்தும் ஏற்பாட்டையும் இலங்கை அரசு செய்தது இந்த பின்னணியில்தான். இதனை அப்போதைய செனட் சபைக்கு சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் வழங்கிய அறிக்கையில் தெளிவாக உணரலாம். 


இந்த மக்களை அந்நியர்கள் என்றும் அவர்களை உள்நாட்டு மக்களுடன் சமத்துவமாக வைத்து நோக்க முடியாது என்றும் அவர் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனநிலை இலங்கை ஆட்சியாளர்களிடத்தில் நீண்டகாலமாகவே இருந்துவந்த நிலையில் இந்த மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள அவர்கள் ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டியிருக்கவில்லை. 1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசாகும் வரை பெருந்தோட்டங்களை நடாத்திவந்த பிரித்தானியர் இந்த தொழிலாளர் சமூகத்தின் சமூக சேமநல உட்கட்டுமான பணிகளையும் செய்ய முன்வந்துள்ளனர்.


 எனவே 1948 இல் இருந்து 1972 வரை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த தேசிய நலத்திட்ட ங்களில் இருந்து இந்த மக்கள் விலக்கியே வைக்கப்பட்டார்கள். உதாரணமாக, தேசிய ரீதியாக எல்லா மக்களுக்கும் இலவச கல்வி திட்டம் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டபோது பெருந்தோட்டத்துறையுடன் இணைந்திருந்த மக்களுக்கு தோட்ட நிர்வாகம் நடாத்திய தோட்டப் பாடசாலை கல்வி முறையே கிடைத்தது. அதுபோல வீடு, சுகாதாரம், குடிநீர், வீதி, மின்சாரம், தபால் தொலைத்தொடர்பு என எந்த விடயத்திலும் அரசாங்கம் எந்த பொறுப்பினையும் ஏற்கவில்லை. 


1972ஆம் ஆண்டு பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்றதோடு கூட்டுத்தாப னங்கள் அவற்றை நிர்வகிக்கத் தொடங்கின. தவிர்க்க முடியாத வகையில் தோட்டங்கள் அரசுடமையானதால் தோட்டப் பாடசாலைகளும் அரசாங்க பாடசாலைகளாயின. ஆனாலும் எண்பதுகளிலேயே அவை நடைமுறைக்கு வந்தன. 90 களிலேயே மின்சாரம் வந்தது. நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஊடான சுத்தமான குடிநீர் திட்டங்கள் இப்போதுதான் தோட்டப்பகுதி வீடமைப்புகளுடன் அறிமுகமாகி வருகிறது. பெருந்தோட்டப் பகுதி வீதி வலையமைப்பு இதுவரை தோட்ட பராமரிப்பாகவே இருக்கிறது.


 அரசாங்கம் அதனை பொறுப்பு ஏற்காதவரை அவற்றை புனரமைப்பதும், பராமரிப்பதும் சிம்ம சொப்பனமான விடயங்கள்தான். இதற்கான பிரேரணை ஒன்று விரைவில் பாராளுமன்றில் முன்வைக்கப்படும். 
1972 ஆம் ஆண்டு முதல் 1992 வரை அரசாங்க கூட்டுத்தாபனத்தினால் நடாத்தப்பட்ட தோட்ட நிர்வாகமும் சமூக நிர்வாகமும் 1992 தனியார் மயப்படுத்தல் நடவடிக்கையோடு புதிய திசையை அடைய நேரந்தது. அதுதான் பெருந்தோட்டத்துறை தொழில் நிர்வாகத்தை பெருந்தோட்டத்துறை பிராந்திய கம்பனிகளிடம் ஒப்படைப்பதுடன் அதன் முகாமை நிர்வாகத்தை மேற்பார்வை செய்ய “பெருந்தோட்ட முகாமைத்துவ மேற்பார்வை பிரிவு” ( PMMD- Plantation Management Monitoring Division)  என்றும், அதுசார்ந்த மக்களின் சமூக உட்கட்டுமான சேமநல விடயங்களை முன்னெடுக்கும் வகையில் “பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம்” ( PHDT – Plantation Human Development Trust ) எனும் அமைப்பும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்டது. 


உலக வங்கியின் நிதியீட்டத்தோடு நோர்வே நாட்டு முகவர் நிறுவனத்தினால் அழைத்துவரப்பட்ட திட்டமிடல் ஆலோசகரான கலாநிதி டேவிட் எம்.டொட் ( Dr.David M. Todd) என்பவரே இந்த” ட்ரஸ்ட்” நிறுவனத்தின் “எண்ணக்கரு பத்திரத்தை” தயாரித்துள்ளார். அதன்படி பெருந்தோட்டம் மனிதவள அபிவிருத்தி நிதியம் தனியார் கம்பனிகளின் கூட்டிணைப்பாக தனியார் கம்பனிகள் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. 


அதற்கான அனுமதியினை 1992 ஆம் ஆண்டு அமைச்சரவை வழங்கியுள்ளது. இதன் பணிப்பாளர் சபையில் அரசாங்கத்தின் பிரதிநிதியாக திறைசேரி உறுப்பினர் ஒருவரும், தொழிற்சங்க பிரதிநிதிகள் இருவரும் நியமிக்கப்படல் வேண்டும். தலைவராக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ஒருவரை நியமிப்பார்.( இப்போது மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் ட்ரஸ்ட் இயங்கினாலும் அதன் தலைவர் பதவிக்கு இந்த அமைச்சர் பரிந்துரைக்க பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரே நியமிப்பார்) ஏனைய அனைத்து பணிப்பாளர்களும், பணிப்பாளர் நாயகமும் பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதிநிதிகளே. 
நிதியத்தின் நோக்கம் தமது வருமானத்தில் ஒரு பகுதியை நிதியத்துக்கு செலுத்துவதன் ஊடாக தொழிலாளர் மக்களின் சமூக உட்கட்டுமான சேமநல விடயங்களைப் பெற்றுக் கொடுப்பதாகும். இதன் கீழ் வீடமைப்பு, சுகாதாரம், குடும்பநல பராமரிப்பு, பாதைகள் உட்கட்டுமான வசதிகள் என அனைத்தையும் தோட்டங்களுக்குள் இந்த நிதியமே முன்னெடுக்க வேண்டும். 


சுருக்கமாக சொன்னால், தொழிலாளி ஊடாகப் பெற்றுக் கொள்ளும் வருமானத்தைக் கொண்டே அந்த மக்களின் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில் எந்த விதத்திலும் தலையிடாது. இந்த விடயத்தை மேற்பார்வை செய்ய ஒரு திறைசேரி அதிகாரி நிதியத்தின் பணிப்பாளர் சபையில் இருப்பார் . அவ்வளவுதான். இதனால்தான் பெருந்தோட்ட பகுதியில் இன்றும் கூட தோட்டப்புற வீடமைப்பு, வைத்தியர்கள், சுகாதார முறை , பிள்ளை பராமரிப்பு என சகல விடயங்களிலும் ட்ரஸ்ட் நிறுவனத்தின் ஊடாக தோட்ட நிர்வாகமே செல்வாக்கு செலுத்தி வருகின்றது.


 மாவட்ட செயலக அதிகாரிகளோ, பிரதேச செயலக அதிகாரிகளோ, பொது சுகாதார சேவை அதிகாரிகளோ இந்த தோட்ட அதிகாரிகளைத் தாண்டி ஒரு பணியினை தோட்டங்களுக்குள் முன்னெடுப்பது சாத்தியமற்றது. 
நாட்டு மக்களின் ஒரு பகுதியானவர்களின் சமூக, சேமநல உட்கட்டுமான பணிகளை முன்னெடுக்கும் இப்படியாக தனியார் வசம் ஒப்படைக்கும் எண்ணக்கரு எந்தளவுக்கு சரியானது என கருதுகின்றீர்கள் ? எனும் கேள்வியினை முன்வைத்தபோது கலாநிதி . டேவிட் எம். டொட் பின்வருமாறு பதில் அளித்தார். 

 அரசாங்கம் அதனை பொறுப்பு ஏ ற்காதவரை அவற்றை புனரமைப்பதும், பராமரிப்பதும் சிம்ம சொப்பனமான விடயங்கள்தான். இதற்கான பிரேரணை ஒன்று விரைவில் பாராளுமன்றில் முன்வைக்கப்படும். 1972 ஆம் ஆண்டு முதல் 1992 வரை அரசாங்க கூட்டுத்தாபனத்தினால் நடாத்தப்பட்ட தோட்ட நிர்வாகமும் சமூக நிர்வாகமும் 1992 தனியார் மயப்படுத்தல் நடவடிக்கையோடு புதிய திசையை அடைய நேரந்தது. அதுதான் பெருந்தோட்டத்துறை தொழில் நிர்வாகத்தை பெருந்தோட்டத்துறை பிராந்திய கம்பனிகளிடம் ஒப்படைப்பதுடன் அதன் முகாமை நிர்வாகத்தை மேற்பார்வை செய்ய “பெருந்தோட்ட முகாமைத்துவ மேற்பார்வை பிரிவு” ( PMMD- Plantation Management Monitoring Division)  என்றும், அதுசார்ந்த மக்களின் சமூக உட்கட்டுமான சேமநல விடயங்களை முன்னெடுக்கும் வகையில் “பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம்” ( PHDT – Plantation Human Development Trust ) எனும் அமைப்பும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்டது.


உலக வங்கியின் நிதியீட்டத்தோடு நோர்வே நாட்டு முகவர் நிறுவனத்தினால் அழைத்துவரப்பட்ட திட்டமிடல் ஆலோசகரான கலாநிதி டேவிட் எம்.டொட் ( Dr.David M. Todd) என்பவரே இந்த” ட்ரஸ்ட்” நிறுவனத்தின் “எண்ணக்கரு பத்திரத்தை” தயாரித்துள்ளார். அதன்படி பெருந்தோட்டம் மனிதவள அபிவிருத்தி நிதியம் தனியார் கம்பனிகளின் கூட்டிணைப்பாக தனியார் கம்பனிகள் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. 


அதற்கான அனுமதியினை 1992 ஆம் ஆண்டு அமைச்சரவை வழங்கியுள்ளது. இதன் பணிப்பாளர் சபையில் அரசாங்கத்தின் பிரதிநிதியாக திறைசேரி உறுப்பினர் ஒருவரும், தொழிற்சங்க பிரதிநிதிகள் இருவரும் நியமிக்கப்படல் வேண்டும். தலைவராக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ஒருவரை நியமிப்பார்.( இப்போது மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் ட்ரஸ்ட் இயங்கினாலும் அதன் தலைவர் பதவிக்கு இந்த அமைச்சர் பரிந்துரைக்க பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரே நியமிப்பார்) ஏனைய அனைத்து பணிப்பாளர்களும், பணிப்பாளர் நாயகமும் பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதிநிதிகளே. 
நிதியத்தின் நோக்கம் தமது வருமானத்தில் ஒரு பகுதியை நிதியத்துக்கு செலுத்துவதன் ஊடாக தொழிலாளர் மக்களின் சமூக உட்கட்டுமான சேமநல விடயங்களைப் பெற்றுக் கொடுப்பதாகும். இதன் கீழ் வீடமைப்பு, சுகாதாரம், குடும்பநல பராமரிப்பு, பாதைகள் உட்கட்டுமான வசதிகள் என அனைத்தையும் தோட்டங்களுக்குள் இந்த நிதியமே முன்னெடுக்க வேண்டும். 


சுருக்கமாக சொன்னால், தொழிலாளி ஊடாகப் பெற்றுக் கொள்ளும் வருமானத்தைக் கொண்டே அந்த மக்களின் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில் எந்த விதத்திலும் தலையிடாது. இந்த விடயத்தை மேற்பார்வை செய்ய ஒரு திறைசேரி அதிகாரி நிதியத்தின் பணிப்பாளர் சபையில் இருப்பார் . அவ்வளவுதான். இதனால்தான் பெருந்தோட்ட பகுதியில் இன்றும் கூட தோட்டப்புற வீடமைப்பு, வைத்தியர்கள், சுகாதார முறை , பிள்ளை பராமரிப்பு என சகல விடயங்களிலும் ட்ரஸ்ட் நிறுவனத்தின் ஊடாக தோட்ட நிர்வாகமே செல்வாக்கு செலுத்தி வருகின்றது.

அப்போது பெருந்தோட்ட மக்களின் சமூக, சேமநல, உட்கட்டமைப்பு விடயங்களை முன்னெடுக்க அரசாங்கத்திடம்திட்டமோ, நிதியோ இருக்கவில்லை. ஏற்கனவே நூற்றாண்டுக்கு மேலாக தனியார் துறையினராலேயே அந்தமக்களின் சமூக, சேமநல, உட்கட்டுமானபணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது அவதானிக்க முடிந்தது. சிலவருடங்கள் அரசாங்க கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கிய தோட்டங்களை மீண்டும் தனியாருக்கே ஒப்படைக்க திட்டமிட்டபோது ஏற்கனவே நடைமுறையில் இருந்த திட்டத்தினை ஒரு முறைமைப்படுத்தும் முயற்சியாகவே இந்தநிதியம் முறைமை குறித்து சிந்திக்கப்பட்டது


 மாவட்ட செயலக அதிகாரிகளோ, பிரதேச செயலக அதிகாரிகளோ, பொது சுகாதார சேவை அதிகாரிகளோ இந்த தோட்ட அதிகாரிகளைத் தாண்டி ஒரு பணியினை தோட்டங்களுக்குள் முன்னெடுப்பது சாத்தியமற்றது. 
நாட்டு மக்களின் ஒரு பகுதியானவர்களின் சமூக, சேமநல உட்கட்டுமான பணிகளை முன்னெடுக்கும் இப்படியாக தனியார் வசம் ஒப்படைக்கும் எண்ணக்கரு எந்தளவுக்கு சரியானது என கருதுகின்றீர்கள் ? எனும் கேள்வியினை முன்வைத்தபோது கலாநிதி . டேவிட் எம். டொட் பின்வருமாறு பதில் அளித்தார். 

அரசாங்கம் பெருந்தோட்டத்துறையை தனியார் மயப்படுத்தலின்போது அதனோடிணைந்த மக்களின் சேமநல விடயங்களை மேற்கொள்ள அமைக்கப்பட்ட பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக மக்கள் அடைந்த பலாபலன்களை மதிப்பாய்வு செய்யும் தேவைப்பாடு எழுந்துள்ளதாக கூறிய கருத்தை ஏற்றுக்கொண்ட அவர் எல்லாவகையான திட்டங்களும் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு மீளமைக்கப்படவேண்டியவையே என்பதில் தாம் உடன்படுவதாகவே தெரிவித்தார். 

இன்றைய நிலையில் ட்ரஸ்ட் நிறுவனத்துக்கு முறைப்படி செலுத்த வேண்டிய மாதாந்த நிதிகளை தோட்டக் கம்பனிகள் செலுத்துவதில்லை. அப்படியே செலுத்துகின்ற கம்பனிகளின் நிதிகளைக் கொண்டு அந்த நிதியத்தின் நடைமுறைச் செலவினங்கள் ( recurrent expenditure ) செய்யப்படுகின்றனவே அன்றி மூலதனச் செலவினங்களாக ( capital expenditure ) உட்கட்டுமான பணிகளுக்கு செலவிடப்படுவதில்லை. எனவே இந்த நிதியத்துக்கும் செலுத்தாமல், உரிய சம்பளத்தையும் வழங்காமல் கம்பனிகள் லாபத்தை சுருட்டிக் கொள்ளும் கைங்கரியங்களிலேயே ஈடுபட்டு வருகின்றன. இவற்றை சரியாக மதிப்பாய்வுக்கு ( Evaluation ) உட்படுத்துவதன் மூலம் பெருந்தோட்டத்துறை தொழில் சார் கட்டமைப்பு மாற்றத்தை மாத்திரமல்லாது சமூக, சேமநல, உட்கட்டுமான பணிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தி அரசின் வகிபாகத்தை அதிகரிக்கச் செய்தல் வேண்டும். 

எனவே, இன்று கால்நூற்றாண்டுக்கு மேலாக தனியார் துறையின் பொறுப்பில் இருக்கும் இந்த சமூக சேமநல உட்கட்டுமான பணிகளை அரசாங்கத்தின் கையில் ஒப்படைத்து அரசாங்க நிதியீட்டத்தில் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறக் கூடியதாக பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தியில் அரசாங்கத்தின் வகிபாகத்தை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டதே “ பெருந்தோட்டப் பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை”. அதனை வெறுமனே புதிய கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கான முகவர் நிறுவனமாகவோ அல்லது திட்டங்களை நடைமுறைப்படுத்தும் முகவர் ( implementing agent) நிறுவனமாகவோ சுருக்கிப் பார்க்காமல் பெருந்தோட்டப் பகுதியில் வாழும். மலையகத் தமிழர் சமூகத்தை காலனித்துவ கட்டுப்பாட்டு முறைமையில் இருந்து மீட்டெடுக்கும் கருவியாக பயன்படுத்தல் வேண்டும். மறுபுறத்தில் தொழில் சார் மறுசீரமைப்பாக கூலிச்சமூகமாக தொடர்ந்திருக்கும் எண்ணக்கருக்களை வலுப்படுத்துவதை விடுத்து நிலவுடமைச் சமூகமாக மாற்றும் முறைமைகள் குறித்த உரையாடல்கள், ஆய்வுகள், திட்டமிடல்களும் அவசியமாகின்றன. 


நன்றி : ஞாயிறு தினக்குரல்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *