Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

‘மலையகம்’ என முதலில் உச்சரித்த ஏ.இளஞ்செழியன்

இலங்கையில் தமிழ்த் தேசிய அரசியலுடன் சேரந்து இயங்கிய இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் வரிசையில் சக்தீ பால அய்யாவைப்போன்றே ஏ.இளஞ்செழியனும் அடங்குவார். எனினும், இருவரும் பின்னாளில் தமக்கான அரசியல் பாதையை தனித்துவமாக தெரிந்துகொண்டார்கள். 
மலையக அரசியல், கலை, இலக்கிய களங்களில் ஏ.இளஞ்செழியனின் பங்கு வித்தியாசமானது.
“தமிழக திராவிட கழகம் தமிழ் மக்கள் மத்தியில் நிலவிய மூடப்பழக்கவழக்கங்களையும் சாதியத்தையும் களைவதற்கு எவ்வாறு இயல, இசை , நாடகத்துறையை பயன்hடுத்தியதோ  அதேபோல் இலங்கை திராவிட முன்னேற்ற கழகமும் தமது கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக இருவகை அனுகமுறைகளை பின்பற்றின. எழுத்தறிவற்றோர் பெரும்பான்மையாக இருந்தமையினால் அவர்கள் மத்தியில் தம் கருத்துக்களை பரப்புவதற்காக இயல், இசை, நாடகத்துறையைப் பயன்படுத்தியதுடன், கற்றுறோர் மத்தியில் தம் கருத்துக்களை புகுத்துவதற்காக எழுத்துத் துறையை பயன்படுத்தியது. 
சுயமரியாதை இயக்கத்தினை   ஆரம்பித்தததுடன் ‘குடியரசு’, ‘விடுதலை’ போன்ற பத்திரிகைகளை பெரியார் வெளியிட்டார். இப்பத்திரிகைகள் திராவிட இயக்கத்தின் அமைப்பாளனாகச் செயற்பட்டது மட்டும்லலாமல் பல, புகழ்பெற்ற இலக்கிய சிருஸ்டி கர்த்தாக்கள் உருவாகக் களமாக அமைந்ததன.
இலங்கை திராவிட முன்னேற்ற கழகமும் இதே உபாயத்தையே இலங்கையில் பின்பற்றியுள்ளது. எவ்வாறு தமிழக திராவிட இயக்கம் பொங்கல் திருவிழாவை தமிழர்களின் திருவிழாவாக அங்கீகரித்து அத்தினத்தன்று பட்டிமன்றங்களையும் கலை நிகழ்ச்சிகளையும் நடாத்தி சீர்திருத்த கருத்துக்களை பரப்பியது. அதேபோல இ.தி.மு.கவும் பொங்கல் தினத்தன்று மலையக மற்றும் வடக்க கிழக்கு பிரதேசத்தில் தமிழ் தேசிய புத்தாண்டு விழாவாக பொங்கல் விழாவினை நடாத்தி வந்துள்ளது. 1950 வரை குடியரசு, விடுதலை போன்ற தமிழக திராவிட பத்திரிகைகளையே தமது இயக்க பத்திரிகையாக இ.தி.மு.க பயன்படுத்தி வந்துள்ளது.  
எனினும் 1950 ல். திரு.ஏ.இளஞ்செழியன் ‘அறிவமணி’ என்ற பத்திரிகையை  இ.தி.மு.க சார்பாக வெளிக்கொண்ர்ந்ததுடன் இ.தி.மு.க சார்பான பல பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கின. இவ்வாறு வெளிவந்த பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் இ.திமு.கவின் சீரிதிருத்த கருத்துக்களை மட்டுமல்லாது அக்காலகட்டத்தில் தமிழ் மக்கள் முகம் கொடுத்திருந்த பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் தாங்கி வெளிவந்தன.” (எழுதப்படாத வரலாறு பக். 113. பெ.முத்துலிங்கம் 1996)
எழுதப்படாத வரலாறு எனும் நூலில்  மேலே குறிப்பிட்டவாறு இலங்கை திராவிட இயக்கத்தின் ஊடாக ஏ.இளஞ்செழியனின் மலையக அரசியல் களத்தில தனது பங்களிப்பை வழங்கிச் சென்றவராவார். சக்தீ பால அய்யா, மலையகத்தில் பிறந்து தலைநகரான கொழும்பை தளமாகக் கொண்டு செய்றபட்டதுபோலவே ஏ.இளஞ்செழியன் இந்தியாவில் பிறந்து சிறு வயதிலேயே இலங்கை வந்ததோடு பெரியார் ஈ.வே.ராமசாமியின் சுயமரியாதை கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு அதனை அடியொற்றி இயங்கி,  இலங்கை சுயமரியாதை இயக்கத்திலும் பின்னர் அதன் தொடர்ந்தேர்ச்சியான இயக்கமான இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்திலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டவர். 
ஓட்டுமொத்த ஒடுக்குமுறைக்கு உட்பட்ட மக்களின் விடுதலைக்காக முற்போக்கு சக்திகளோடு இணைந்து செயற்பட்ட இவர் தந்தை செல்வா போன்றவர்களுடன் களத்தில் நின்று செயற்பட்டவர்.அதேபோல முரண்பட்டவர்.  தென்னிலங்கை முற்போக்கு சக்திகளுடன், இடதுசாரிய இயங்கங்களுடன் இணைந்தும் முரண்பட்டும் செயற்பட்ட இவரின் நேர்வூட் கூட்டம், மக்கள் விடுதலை முன்னணியினதும் அதன் தலைவர் ரோஹன விஜேவீர வினதும் மலையக மக்கள் தொடர்பான நிலைப்பாட்டை வெளிப்படுத்திய வரலாற்றுக்குரியது. 
1949 முதல் இலங்கை திராவிடக் கழகம், இலங்கை திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பெயரினை பிரகடனப்படுத்துவது என முடிவு செய்தது. அதன் பொதுச் செயலாளராகவிருந்த இளம் பேச்சாளரான ஏ.இளஞ்செழியன், இந்த பெயரை பிரேரித்துடன் இலங்கையைத் தாயகமாகக் கொண்ட எம்மால், தமிழகத்தை சார்ந்த திராவிடர் இயக்கம் சார்ந்த விடயங்களை முன்னெடுக்க முடியாது. எனவே நாம் இனத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படவேண்டும் என்றார். 
திரு.ஏ.இளஞ்செழியன்; பொதுச் செயலாளராக பொறுப்பேற்றதோடு நாடுதழுவிய இயக்கமாக பரிணமித்தது. சிறப்பாக இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் பொதுவாக தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் குரல் எழுப்பியது.
திரு.ஏ.இளஞ்nசிழியன் முதன் முதலாக 1946 ல். கண்டிக்கு அண்மையில் உள்ள (கடுகண்ணாவ) கிரிமெட்டிய தோட்டத்திற்கு விஜயம் செய்ததுடன்கொழும்புக்க மட்டுப்பட்டிருந்த திராவிட முன்னேற்றக்கழகம் மலையகத் தோட்டங்களுக்கும் வியாபித்தது. தமிழக திராவிடக் கழகத்தினர் மக்களின் கலாசாரத்துடன் ஒன்றிணந்த குடும்ப விழாக்களை தமது பிரசார ஊடகமாகப் பயன்படுத்தினர். திருமணம், பூப்பெயதுதல் போன்ற விழாக்களில் உறுவினர்கள் சுற்றம் வருகை தருவதோடு கழகத்தோழர்களையும் அழைப்பதை கடமையாகக் கொண்டிருந்தனர். திருமணம் ஒன்று நடைபெற்றால் அங்கு ஐயர் புறக்கணிக்கப்பட்டு கழகத்தலைவர் முன்னிலையில் திருமணம் நடத்தப்பட்டது. இத்தகைய கூட்டங்களில் மதத்தiயும் சாத்தரங்களையும் சாடுவது ஒரு குறிக்கோளாகக் கொண்டனர்.அதே ஊடகத்தை இலங்கை திராவிடக்கழகமும் பின்பற்றியது. ஏ. இளஞ்செழியன், செயலூக்க உறுப்பினரானதுடன் இவ்வூடகத்தை பயன்படுத்துவது அதிகமாயிற்று. 
இரண்டாம் உலக யுத்ததின்போது பிரித்தானிய காலனித்துவ இராணுவத்தில் இணைந்து சேவையாற்றிவிட்டு வீடு திரும்பிய கிரிமெட்டிய தோட்டத்தைச் சேர்ந்த கே.பீ குணசீலன் திராவிடக் கொள்கையின் பால் கவரப்பட்டதுடன் தி.மு.கவுடன் இணைந்து செயற்பட்டார். 1946 ஆம் ஆண்டு தனது தங்கை சௌந்தராம்பாள் திருமணத்தை சீர்திருத்த முறையில் நடாத்த கே.பி.குணசீலன் தனது தோட்டத்துக்கு ஏ.இளஞ்செழியனை வரவழைத்தார். அதன்போது அவர் அந்த திருமண நிகழ்வில் உரையாற்ற கடும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்ட நிலையில், தென் திசையை பார்க்கிறேன் என் செய்வேன் எந்தன் தோள்களெல்லாம் பூரிக்குதடா எனும் பாரதிதாசன் கவிதைகளை மேற்கோள்காட்டி, மலையகத்தை பார்க்கின்றேன் எத்தன் தோள்கள் எல்லாம் பூரிக்குதடா என மலையக மக்கள் மத்தியில் நிலவும் சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும், சாதியததையும், மதத்தையும் சாடலானார். (எழுதப்படாத வரலாறு, பக் 19). இதன்போது ஏ.இளஞ்செழியன் பயன்படுத்தியதுதான் ‘மலையகம்’ என்ற சொல் முதன் முறையாக ஒலித்தது என சொல்லப்படுவதுமுண்டு. 
மலையகத்  தோட்டங்கள் தோறும் இலங்கை திராவிடக் கழக கிளைகளை அமைத்து பிரச்சாரங்களை மேற்கொண்டு அரசியலை முன்னடுத்த ஏ.இளம் செழியன் கலைகள், நாடகங்களை அதிகமாக தமது பிரசாரத்திற்கா முன்னெடுத்தவர். ‘ஈழத்தில் பெரியார் முதல் அண்ணாவரை’ எனும் நூலினை எழுதியதன் ஊடாக அவரது அரசியல், கலை செயற்பாடுகளை பதிவு செய்திருப்பவர். இன்றும் கூட அரசியல், ஊடக, சமூக சயற்பாட்டுத் தளங்களில் செயற்பட்டிக் கொண்டிருக்கும் பலர் அவரது பாசறையில் வளர்ந்தவர்கள் அல்லது அவர்களது வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது. தான் இறக்கும் காலம் வரை கொழும்பு முதலாம் குறுக்குத்தெரு காரியாலயத்தில் அமரந்து அரசியல் கருத்துக்களை பேசிவந்த அவர் அந்திம காலத்தில் முழுமையான ட்ரொசிக்கீயவாத இடதுசாரியாக தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டிருந்தார். பிடிவாத குணம்மிக்க ஏ.இளஞ்செழியன் பொது வாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்து தனிமனிதனாகவே வாழந்து மறைந்தவர். தனது இறுதி நாட்களை புசல்லாவையில் அமைந்துள்ள மலையக மக்களின் பாரம்பரிய நூதன சாலையிலேயே கழித்த அவர் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் பராமரிப்பில் இருந்தே உயிர் நீத்தார். கண்டி, சமூக அபிவிருத்தி நிறுவனத் தலைவர் பெ.முத்துலிங்கம்  எழுதியுள்ள ‘எழுதப்படாத வரலாறு’ எனும் நூலின் ஊடாக அவரது வாழ்க்கை வரலாறு பதிவு பெற்றுள்ளது. 
 
(தொடரும் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *