Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பெருந்தோட்டத்துறை மக்களின் அபிவிருத்தியில் அரசாங்கத்தின் வகிபாகம்

– பிலிப்பைன்ஸிலிருந்து மல்லியப்புசந்தி திலகர் பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்களின் பொருளாதார பிரச்சினையாக சம்பளம் தொடர பாக தொடர் போராட்டங்களும் , வாதப்பிரதிவாதங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், அந்த மக்களின் சமூக, சேமநல உட்கட்டுமான விடயங்களை கையாள்வதற்காக அமைக்கப்பட்ட “பெருந்தோட்ட

Read more

தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உடமையாளராக்குவதே ஒரே தீர்வு

– சபையில்  திலகர் எம்.பி இலங்கையின் தேயிலைத் தொழிற்றுரையை முன்வைத்து எழுந்திருக்கும் பிரச்சினை இன்று , நேற்று உருவானதல்ல. இதற்கு பின்னால் நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது.

Read more

பாராளுமன்ற உறுப்பினர் எம். திலக்ராஜ் தினகரன் வாரமஞ்சரி க்கு வழங்கிய நேர்காணல்

இப்போது திருப்தியாக இருக்கிறதா? ஆம்.. அதிருப்தியில் இருந்து எழும்புகின்ற திருப்தியாக இருக்கிறது. நாட்டின் ஜனநாயகத்தின் மீதும் சட்ட ஆட்சி மீதும் ஏற்படுத்தப்பட்ட சவாலில் இருந்து மீட்சி பெற்ற

Read more

அரசியலமைப்பை மாற்றுவதற்கான நிலைமாற்று காலமே இது -மயில்வாகனம் திலகராஜா பா.உ

“சமகாலஅரசியல்திகில்நிலையிலிருந்து நாட்டைமீட்பதற்கானவழிமுறைகள்”எனும்தலைப்பில், நல்லாட்ணிக்கானதேசியமுன்னணிகொழும்பில்கருத்தரங்கம்ஒன்றினைஒழுங்கு செய்திருந்தது. பாராளுமன்றகலைப்புதொடர்பாகஉயர்நீதிமன்றதீர்ப்புவெளியாகியதருணத்தில்இடம்பெற்றஇந்தசெயலமர்வில்நல்லாட்சிக்கானதேசியமுன்னணியின்தவிசாளர்சிராஜ்மஷூர், தேசியஅமைப்பாளர்நஜாமுஹம்மட், பிரதிதவிசாளர்அப்துல்ரகுமான்ஆகியோருடன்சிறப்புபேச்சாளர்களாகஐக்கியதொழில்வாண்மையார்கள்இயக்கத்தின்உறுப்பினர்பொறியியலாளர்காமினிகுணவர்தனமற்றும்நுவரெலியாமாவட்டபாராளுமன்றஉறுப்பினர்எம். திலகராஜ்ஆகியோர்அழைக்கப்பட்டிருந்தார்.  சமகால அரசியல் திகில் நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கான வழிமுறைகள் குறித்தபாராளுமன்றஉறுப்பினர்எம்.திலகராஜ்ஆற்றிய உரையின் தொகுப்புதினக்குரல்வாசகர்களுக்காகஇங்கேதரப்படுகின்றது. கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பதாக இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் ஒன்றுக்கான பிரசாரத்தை முன்வைத்து அரசியல் முன்னெடுப்புகளும்,

Read more

உரிமை எங்கே?” என கதை எழுதி உரிமைக் குரல் எழுப்பிய செந்தூரன்

மல்லியப்புசந்தி திலகர் இளைஞர் தளபதி இர.சிவலிங்கத்தின் இலக்கிய வழி அரசியல் பங்களிப்பை பார்த்ததுபோலவே அவருடன் கூடவே மறக்க முடியாதவராக வருபவர் செந்தூரன். சிவா – செந்தூரன் இரட்டையர்களாகவே

Read more

மலையக புதியகிராம அபிவிருத்தி அதிகார சபை

கடந்த செப்தெம்பர் 19 ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ‘பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை’ மலையக அரசியல் வரலாற்றில் மிக முக்கிய அடைவு

Read more

மலையகத்தில் “ஆத்திர” பர்பரையை உருவாக்கிய இர. சிவலிங்கம்

சமகாலத்தில் இலக்கிய குரலாக மாத்திரமன்றி தமது ஆசிரியத்துவத்தின் ஊடாக அரசியல் செயற்பாட்டில் பங்கேற்ற மலையக ஆளுமையாக இர.சிவலிங்கத்தை அடையாளப்படுத்த முடியும்.17 /05/1932  ல் பிறந்து மலையகத்தில் கிடைத்த கல்வி

Read more

மலையகத் தமிழர் : இலங்கையரானது எப்போது?

-மல்லியப்புசந்தி திலகர் கடந்த வாரம் செப் 19 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டங்கள் மலையகத் தமிழர் வரலாற்றில் ஒரு சாதனையாக பார்க்கப்டுகின்றது, விவாதிக்கப்படுகின்றது.

Read more

நேருவின் மரணத்தினால் திசைமாறிய இந்திய வம்சாவளியினர் நிலை

சிறிமா பண்டாரநாயக்காவின் மேலவைக்கான அறிக்கையின் நான்காம்பாகமாக அமைந்த கடந்த வாரப் பகுதி “யாருக்கும் புரியாத கணக்கு”என்றே தலைப்பிடப்பட்டு இருந்தது. காரணம், பெரும்பாலானவர்க்கு அது புரியாத ஒன்றாகவே இருக்கும். ஆனாலும், புரியாவிட்டாலும் கூட இதுதான் மனிதப்பண்டங்களாகமலையகத் தமிழர்களைப் பங்கிட்டுக் கொண்ட “யாருக்கும் புரியாதகணக்கு” என்பதை புரிந்து கொள்ளவே இந்த அறிக்கை இங்கே பதிவுசெய்யப்படுகின்றது. எனினும், இந்த பாகத்தில் பின்வரும் விடயங்கள்அவதானிக்கத்தக்கது. இந்தியாவுக்கு மீண்டும் சென்று அந்நாட்டின் பிரஜாவுரிமையைப்பெறுவதற்கு விரும்பினால், அவர்களின் பிரேரணைக்கு இந்தியஅரசாங்கம் மறுப்பு தெரிவிக்கலாகாது என்ற வரிகள் மூலம் இலங்கை எப்போதும் இவர்களை அனுப்பும் எண்ணத்தேயே கொண்டிருந்தது என்பது தெளிவு. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியர்களை இந்தியாவுக்குகட்டாயமாக திருப்பி அனுப்புதலாகாது எனவும் இந்தியப் பிரதமர்விரும்பினார்.// என்ற வரிகள் மூலம் இந்தியா இவர்களை ஏற்றத் தயாராகஇருக்கவில்லை என்பதும் தெளிவு. இந்த ஆட்களில் எவருமே நாடற்றவர்கள் எனும் நிலைப்பாட்டினைஇலங்கைகைத் தூதுக்குழு ஏற்றுக்கொள் ளவில்லை// இந்த நாடற்றவர் என்ற சொல்லை இந்தியா விரும்பியதும், இலங்கைவிரும்பாததும் ஒரே காரணத்துக்காக என்பதுவும் தெளிவு. இருவருமேஎங்காவது ஒரு பக்கத்தில் இந்த மனிதப்பண்டங்களை சுமத்திவிடுவதிலேயே குறியாக இருந்துள்ளனர் என்பதுவே அது. இருந்தபோதிலும், சிறிமாவின்  அறிக்கையின் தொடர்ச்சியை வாசித்துஅறிவதன் மூலம் இரண்டு அரசுகள் எவ்வாறு “ குத்துமதிப்பாக”மக்களைப் பண்டங்கள் போன்று பரிமாற்றம் செய்ய ஒப்பந்தங்களைசெய்து கொண்டுள்ளார்கள் என்பது புலப்படும். ( அறிக்கை தொடர்கிறது) பிரஜாவுரிமைக்காக 775000 ஆட்களை உள்ளடக்கிய கிட்டத்தட்ட 237034விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. இவற்றில் 134188 ஆட்களைஉள்ளடக்கிய 31409 விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டதுடன், இந்தநபர்கள் இலங்கைப் பிரசைகளாகவும் பதிவு செய்யப்பட்டனர். 675000ஆட்களை உள்ளடக்கிய 205625 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 1954ஆம் ஆண்டு உடன்படிக்கையில் இருந்து இந்திய உயர்ஸ்தாணிகராலயம்53085 நபர்களை இந்திய பிரஜைகளாக பதிவு செய்துள்ளது. 1954 ஆம் ஆண்டு. உடன்படிக்கை தோல்வி அடைந்ததன் காரணம், அதுதனி நபர்களின் தற்றுணிபிற்கு அதிகமான விடயங்களைவிட்டுவிட்டதேயாகும். இலங்கைப் பிரசாவுரிமையை பெற்றுக் கொள்ளத்தவறிய இந்திய வம்சாவளி நபர் ஒருவர், இந்திய பிரசாவுரிமைக்குவிண்ணப்பிப்பதா இல்லையா என்பதைத் தெரிவு செய்யும் பொறுப்பைஅவருக்கே விட்டுவிட்டதும் இந்திய பிரசாவுரிமை வழங்கல் தொடர்பாகஅதிகாரிகளின் தற்றுணிபிற்கு அனுமதியளித்ததுமானதோர் ஒப்பந்தம்வெற்றியடைய வெகு சிறிய வாய்ப்பே இருந்தது. இந்திய பாகிஸ்தான் வதிவாளர்கள் ( பிரசாவுரிமை ) சட்டத்தின் கீழ் பதிவுசெய்யும் நடைமுறை பூர்த்தியானதும்  நான் பண்டித் நேருவுடன்பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்தேன். இலங்கைப்பிரசாவுரிமையினைப் பெற்றுக் கொள்ளாத இலங்கையிலுள்ள இந்தியவம்சாவளியினர் இந்திய பிரசைகளாவர் என்பதே இலங்கையின்நிலைப்பாடு என்பதை தெளிவாக எடுத்துக் கூறினேன்.இந்தியஅரசாங்கம் இந்த நிலைப்பாட்டினை ஏற்றுக்கொள்ள கொள்ளவில்லை.இதனால் பேச்சுவார்த்தைகள் முடங்கின. இக்கட்டத்திலே , இந்தியபிரதமருடன் நேரடி பேச்சுவார்த்தையினை நடத்துவது உசிதமானது எனநான் நினைத்தேன். அவர் அதனை ஏற்றுக்கொண்டார். பிரதமர் நேருஇந்த வருடம் மே மாதம் காலமானதை நீங்கள் அறிவீர்கள். அதனால், இந்தவிடயத்தை நான் அவரை தொடர்ந்து பிரதமராகிய லால் பகதூர்சாஸ்திரியுடன் மீண்டும் பேசவேண்டி ஏற்பட்டது. இந்திய பிரதமரின் முன்னெடுப்பின் பேரில் இப்பிரச்சினை பற்றிஉத்தியோகபூர்வ மட்டத்தில் கலந்துரையாடல் நடத்துவதற்காகசெப்டெம்பரில் உத்தியோகபூர்வ தூதுக்குழு ஒன்று கொழும்புக்குஅனுப்பிவைக்கப்பட்டது. இந்த நபர்களின் பிரசாவுரிமை அந்தஸ்துதொடர்பாக இலங்கை வெளிப்படுத்திய கருத்துக்களை இந்தியதூதுக்குழு ஏற்றுக்கொள்ளாதபோதிலும் ஒரு விட்டுக்கொடுப்புமிகுதீர்வினை இந்தியா முன்வைத்தது. அதாவது, இந்திய வம்சாவளியினரில்குறிப்பிட்ட எண்ணிக்கையினர், இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படல்வேண்டும். ஏனையோருக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்படல்வேண்டும் என்பதே அதுவாகும். (அறிக்கை தொடரும் ) பின்குறிப்பு : சிறிமாவின் அறிக்கையின் ஐந்தாம் பாகத்தில் மிகமுக்கியவிடயம் ஒன்று வெளிப்படுவது அவதானிக்கத்தக்கது. 1949  இந்தியபாகிஸ்தான் வதிவாளர் ( பிரஜாவரிமை ) சட்டம் நிறைவேற்றப்பட்டதில்இருந்து இலங்கையின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட பண்டிற்ஜவகர்லால் நேரு, இந்திய வம்சாவளியினரை இலங்கையில் இருந்துமீளப் பெறாமல் இருப்பதற்கான எல்லா சாத்தியமான அரசியல்நகர்வுகளையும் செய்துள்ளார். அவரது இறப்புவரை அந்த நகர்வுசாத்தியமாகியுள்ளது. அவரது இறப்பு நிகழ்ந்து (

Read more

மலையகத் தமிழர்களின் நீண்டகால கனவு நிறைவேற்றியுள்ளது

மலையகத் தமிழர்களின் நீண்டகால கனவு இன்று நிறைவேற்றியுள்ளது. அரச சேவையை முழுமையாக மலைநாட்டுக்கு கொண்டுவருவோம் என்று மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைசச்சர்

Read more